சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம் | tamil


சாணக்கியரின் அர்த்த சாஸ்த்திரம்:

அனைவருக்கும் வணக்கம் நீங்கள் வாழ்க்கையில் உடனடி வெற்றியை அடைய விரும்பும் ஒருவராக இருந்தால் சாணக்கியரால் கூறப்பட்ட இந்த விரைவான திருத்தங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வாழ்க்கையில் ஜெயிக்க நேர்மை தேவைதான் ஆனால் தந்திர வலிகளும் தேவைப்படுகிறது யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே அந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்பதைத்தான் இந்த பதிவில் நாம் காணப் போகிறோம்.

சாணக்கிய நீதி தமிழ்:

1.வாழ்க்கையில் வெற்றி அடைய மிக முக்கிய மந்திரம் உனது ரகசியங்களை ஒருபோதும் எவருடனும் பகிரது.

2.எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றிக் கொள்ளுங்கள் உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள் யாரையும் பின் தொடராதீர்கள.

3.போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த விட முடியாது இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்து விடும்.

4.நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும் நேர்மறை விமர்சனங்களால் தலைக்கனம் கொண்டும் எதிர்மறை விமர்சனங்களால் துவண்டு போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்பு சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும்.

5.ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும் பின் வாங்குபவர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர் உங்களின் பலவீனம் உங்களைத் தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது.

6.பணம் தற்போது உங்களிடம் இல்லாவிட்டாலும் விரைவான வெற்றி அடைய விரும்பினால் உங்களை சுற்றி பணம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் கண்மூடித்தனமாக மதிக்கிறது நம்புகிறது எனவே உங்கள் வாழ்க்கையில் பண கஷ்டம் இருப்பதை எப்போதும் வெளியுலகத்திற்கு காட்டிக் கொள்ளாதீர்கள்.

7. உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள் கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக் கூடாது அது வெற்றி என் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள்தனமான செயல்.

8. புத்திசாலித்தனமான ஒரு நபர் தனது பொருளாதாரத்தில் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஒருபோதும் விவாதிக்க மாட்டார் உங்கள் நிதி நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் செய்திகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

அதனை ஒருபோதும் உங்கள் நண்பர்களுடன் விவாதிக்காதீர்கள் உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

9. அதிக நேர்மை சற்று ஆபத்தான விஷயம் தான் நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படுகின்றன அதைத் தொடர்ந்து நேர்மையான நபர்களும் கூட எப்போதும் நேர்மையானவர்களாக இருப்பவர்களை விட தந்திரமானவர்களாக இருப்பதை வெற்றிக்கான முக்கியமான தகுதியாகும். 

10. உங்கள் மிக முக்கியமான நோக்கங்களையும் லட்சியங்களையும் மறைத்து வைக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மிக அடிப்படையான அறிவுரை என்னவென்றால் உங்கள் லட்சியத்தின் மீதும் வழிமுறைகளின் மீதும் மற்றவர்களின் அதிக கவனத்தை ஈர்க்காமல் செயலில் ஈடுபட வேண்டும்.

11. சிங்கத்தின் குகைக்குள் சென்றால் மான் கொம்புகள் கிடைக்கும் நரியின் குகைக்குள் சென்றால் எலும்பு துண்டுகள் மாட்டின் வால் கிடைக்கும் இவ்வாறு நாம் ஒரு செயலில் இறங்கினால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை யோசித்து அந்த செயலில் இறங்க வேண்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடிக்கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்திலும் பார்க்க வேண்டும் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்துக் கொள்ள வேண்டும் மனதை ஒருமுகப்படுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும்.

12. நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைப்படக்கூடாது கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை அறிவுடையோர்கள் நிச்சயம் இதை செய்ய மாட்டார்கள் முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியைத் தேடித் தரும் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருங்கள் கவலைப்பட்டு உடலையும் மனதையும் பலவீனம் ஆக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது.

13. பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்கமாட்டார்கள் அத்தகையவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு நமக்குத் தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம் அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே.

விரைவாக சிந்திக்க வேண்டும் அறிவாக செயலாற்ற வேண்டும் யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

14. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டும் ஒரு செயலை தொடங்கும் முன்பு ஒரு மூன்று கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் செய்யும் அந்த செயலினால் விலையை இருக்கும் விளைவுகள் என்னென்ன.

15.நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயன் உடையது இதைப்பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள்.

16. ஒரு நபரின் அறிவு புத்தகங்களில் மட்டுமே அடங்கியிருந்தால் அவருடைய செல்வம் மற்றவர்களிடம் இருந்தால் அந்த நபர் தனது அறிவையோ அல்லது அவர்களின் செல்வத்தையோ சூழ்நிலை தேவைப்படும் போது பயன்படுத்த முடியாது.

17. வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்கள் அது குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பதோடு அதற்கான சிறிய சிறிய முயற்சிகளை மேற்கொண்டே இருப்பது அவசியம் சரியான இலக்கை நோக்கி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

 இத்தகைய சாணக்கியரின் வெற்றி குறிப்புகளை அனைவரும் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும்.


read more:

What habits do girls like in boys?

Post a Comment

0 Comments